குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் திமுக - தோழமைக் கட்சிகள் சார்பில் பெறப்பட்ட 2 கோடிக்கும் அதிகமான மக்களின் கையெழுத்துக்கள் அடங்கிய படிவங்களை புதனன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை நேரில் சந்தித்து டி.ஆர்.பாலு, வைகோ, டி.கே.ரங்கராஜன் எம்பி., தொல்.திருமாவளவன், கே.சுப்பாராயன், கனிமொழி, திருச்சி சிவா, மாணிக்கம் தாகூர், சின்ராஜ் உள்ளிட்ட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அளித்தனர்.