tamilnadu

img

எவரெஸ்ட் சிகரத்தை 23-வது முறை எட்டி உலக சாதனை!

எவரெஸ்ட் சிகரத்தை 23-வது முறையாக எட்டிய நேபால் நாட்டை சேர்ந்த கமி ரிடா செர்ப்பா, உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். 

நேபாளத்தில் சொலுகும்பு மாவட்டத்தில் தாமே என்ற கிராமத்தைச் சேர்ந்த கமி ரிடா செர்ப்பா (49 வயது), 23வது முறையாக உலகின் மிகப்பெரிய மலைச்சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை, இன்று காலை 7.50 மணிக்கு எட்டியுள்ளார். இதன் மூலம் எவரெஸ்ட் சிகரத்தை 22 முறை எட்டிய தனது உலக சாதனையை தானே முறியடித்துள்ளார்.

கடந்த 25 ஆண்டுகளாக எவரெஸ்ட் நோக்கி பயணிக்கும் இவர், 1994-ஆம் ஆண்டில் இவர் முதல் முறையாக எவரெஸ்ட் மலை உச்சியை அடைந்துள்ளார். மேலும்,  கடந்த 2018-ஆம் ஆண்டில், எவரெஸ்ட் சிகரத்தை 22 முறை தொட்டு சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.