பாக்தாத்
ஈராக் மக்கள் ஊழலை ஒழிக்க, வேலைவாய்ப்பு பெருக்க மற்றும் பொதுச் சேவை மேம்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் அப்துல் மஹ்திக்கு எதிராக கடந்த இரண்டு மாதங்களாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த தொடர் போராட்டத்தில் இதுவரை 344 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், செவ்வாயன்று இரவு ஈராக் நாட்டின் முக்கிய நகரான நஜாஃப்பில் உள்ள ஈரான் தூதரகம் முன்பு போராட்டம் நடத்தி திடீரென ஈரான் தூதரகக் கட்டிடத்துக்கு தீ வைத்தனர். இந்த தீவிபத்தில் பொருட் மற்றும் உயிர் சேதம் தொடர்பாகத் திடமான தகவல் வெளியாகவில்லை என்றாலும், ஈரான் தூதரகம் மீது தாக்குதல் நடத்துவது 2-வது முறையாகும். இந்த மாத தொடக்கத்தில் ஷியா முஸ்லிம்களின் புனிதத் தலமான கர்பாலாவில் இருக்கும் ஈரான் தூதரகம் தாக்கப்பட்டது. ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு அரசு கண்டனத்துடன் எச்சரிக்கை விடுத்துள்ளது.