நாமக்கல், ஏப். 7-
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தியை ஆதரித்து சிஐடியுமற்றும் வாலிபர் சங்கத்தினர் இருசக்கர வாகனப் பிரச்சாரம் மேற்கொண்டனர். ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்திக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தினர் பள்ளிபாளையத்தில் இருசக்கர வாகனப் பிரச்சாரம் மேற்கொண்டனர். பள்ளிபாளையம் சிஐடியு வட்டார சங்க கன்வீனர் காசிவிஸ்வநாதன் தலைமை தாங்கினார். இந்த வாகனப் பிரச்சார பயணத்தை சிஐடியு நாமக்கல் மாவட்ட செயலாளர் ந.வேலுச்சாமி துவக்கி வைத்துஉரையாற்றினார். இதில் சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.அசோகன், விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர்கே.மோகன், பள்ளிபாளையம்ஒன்றிய தலைவர் ஏ.அசன், ஒன்றிய செயலாளர் எஸ். முத்துக்குமார், ஒன்றிய உதவித் தலைவர் கே.குமார், பொதுத்தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் எஸ்.செளந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். வாலிபர் சங்கம் இதேபோல் பள்ளிபாளையத்தில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தியை ஆதரித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வாகனப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பிரச்சாரம் ஆவாரங்காட்டில் துவங்கி பள்ளிபாளையம் நகரம், அக்ரஹாரம், அத்திப்பாளையம், ஒட்டமெத்தை,அம்மன்நகர், அலமேடு, புதுப்பாளையம், வசந்தநகர்,சத்யாநகர், தாஜ்நகர், காடச்சநல்லூர், கொக்கராயன்பேட்டை, பாரதிநகர், காவேரியில் நிறைவு பெற்றது.இந்த வாக்கு சேகரிப்பு வாகனப் பிரச்சாரத்திற்கு வாலிபர் சங்க பள்ளிபாளையம் ஒன்றியத் தலைவர் ஆர். லெனின் தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட வாலிபர் சங்க செயலாளர் என்.கண்ணன், மாவட்டத் தலைவர் இ.கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் வி.மணிகண்டன், மாவட்டக் குழுஉறுப்பினர் தமிழரசி மற்றும் ஒன்றிய செயலாளர் பிரபாகரன்உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.