நாமக்கல், ஜூலை 3- நாமக்கல் மாவட்டத்திற்கு வெளிமாவட்டங்களில் இருந்து வரும் நபர்களை கண்காணிக்க மாவட்டம் முழு வதும் 18 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங் களைச் சேர்ந்த நபர்கள் அருகில் உள்ள பள்ளிகள் மற்றும் கல் லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் மையங் களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு, கபசுர குடி நீர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் உள்ளாட்சி நிர்வாக சுகாதார பணியாளர் கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியும், மையத்தை தூய்மையாக பராமரிக்கும் பணிகளும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
மேலும், இந்த மையங்களில் தனிமைப்ப டுத்தும் நபர்களின் வெப்பநிலை கண்காணிக்கப்படு வதுடன், பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வீட் டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்நிலையில், தனிமைபடுத்தும் மையங்களில் பணி யில் ஈடுபட்டு வரும் சுகாதாரத்துறை, உள்ளாட்சி நிர்வாக சுகாதார தூய்மை பணியாளர்கள், வருவாய்த்துறை, காவல் துறை ஆகியோர்களின் உடல் நலத்தை பராமரிக்க நோய் எதிர்ப்பு மருந்துகளை மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் வழங் கினார்.