நாமக்கல், ஜூன் 13- குமாரபாளையம் அரசு மருத்து வமனைக்கு கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக் காக ரூ.15 லட்சம் மதிப்புள்ள மருத் துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை யில் மின்சாரம், மதுவிலக்கு மற் றும் ஆயத்தீர்வைத்துறை அமைச் சர் பி.தங்கமணி வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபா ளையம் அரசு மருத்துவமனைக்கு பலசெயல்திறன் கொண்ட, இரு தய துடிப்பை கண்காணிக்கும் 2 கருவிகள், தீவிர சிகிச்சை பிரிவில் பயன்படுத்தக் கூடிய நோயாளிக ளின் தேவைக்கேற்ப படுக்கை உய ரத்தை மாற்றியமைக்கக் கூடிய அதிநவீன 5 கட்டில்கள், நோயா ளிகளை இடமாற்றம் செய்ய உதவி யான சக்கரத்துடன் கூடிய 2 படுக் கைகள், ஆக்சிஜன் சிலிண்டர் உள் ளிட்ட பல்வேறு மருத்துவ உபக ரணங்கள், நோயாளிகளின் அறை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு உள் ளிட்ட மருத்துவமனையின் பல் வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லும் 2 அதிநவீன தள்ளு வண்டிகள், 2 எண்ணிக்கை சக்சன் அப்பாரட்டஸ் கருவிகள், எலக்ட் ரானிக் முறையில் ரத்த அழுத் தத்தை பரிசோதிக்கும் 7 கருவி கள், பாதரசம் அழுத்தமுறையில் இயங்கும் ரத்த அழுத்தத்தை பரி சோதிக்கும் 6 கருவிகள், 100 எண்ணிக்கை படுக்கை விரிப்பு கள், விரலில் மாட்டி உடலின் ஆக் சிஜன் அளவை கண்டறியும் பெரிய நபர்களுக்கான 7 கருவி கள், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் 1 கருவி, 1 எண்ணிக்கை செமி ஆட்டோ அனலைசர் கருவி உள் பட ரூ.15 லட்சம் மதிப்பிலான கரு விகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி வழங்கி னார்.
மேலும், குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கரூர் வைஸ்யா வங்கியின் மூலம் வழங் கப்பட்ட ரூ.4.70 லட்சம் மதிப்பீட் டிலான ஜெனரேட்டரை அமைச் சர் இயக்கிவைத்து, குமாரபாளை யம் அரசு மருத்துவமனையில் புதி தாக கட்டப்பட்ட பிரேத பரிசோ தனை கூடத்தை பார்வையிட் டார். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, இணை இயக்குநர் (மருத்துவப்ப ணிகள்) த.கா.சித்ரா, குமாரபா ளையம் நகர வங்கி தலைவர் எ.கே. நாகராஜ், வட்டாட்சியர் தங்கம், நகராட்சி ஆணையாளர், மருத்து வர்கள், செவிலியர்கள், அரசு அலு வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.