நாமக்கல், ஆக.12- திருச்செங்கோடு வட்டம், 29ஆவது வார்டில் சாக்கடை கழிவுநீர் சாலையில் குளம் போல் தேங்கியதால் சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட் டுள்ளது. திருச்செங்கோடு நக ராட்சிக்குட்பட்ட 29ஆவது வார்டு நாலாவது தெரு வழியாக நகரின் முக்கிய சாலையாக விளங்குகிறது. இச்சாலை வழியாக சாணார் பாளையம்ஸ்ரீவி.காலனி யில் குடியிருக்கும் 150க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் பயணிக்கின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழி லாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இச் சாலையை பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில், சாலையை ஒட்டி செல்லும் சாக்கடை கால்வாயை முறை யாக பராமரிக்கப்படவில்லை. இதனால் சாக்கடை கால்வாயில் குப்பைகள் ஆங் காங்கே தேங்கி அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாக்கடை கழிவுநீர் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக சாலையில் செல் கிறது. மேலும் சாக்கடை கழிவுநீர் சாலையில் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகின்றன. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் அதி காரிகளின் கவனத்திற்கு கொண்டு சென் றனர். ஆனால் இதுவரை எவ்வித நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக திருச்செங்கோடு நகராட்சி நிர்வாகம் தலையிட்டு போர்க் கால அடிப்படையில் சுகாதாரம் பாது காத்திட சாக்கடை கழிவுநீர் கால்வாயை செப்பனிட வேண்டும். குப்பைகள் கொட் டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.