tamilnadu

img

தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்றிடுக பொதுமக்கள், மாணவர்கள் கோரிக்கை

நாமக்கல், செப்.19- திருச்செங்கோடு அருகே உள்ள தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்றிடுமாறு பொதுமக்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையம் ஒன்றியம், அகரம் கிராமத்தில் கொத்தமபாளையம் அருகே திருமணிமுத்தாறு தரைப் பாலம்  உள்ளது. கருமகவுண்டம் பாளையம், கோக்களை, பெரிய மணலி, புள்ளாச்சிபட்டி ஆகிய பகுதி களுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையாக அமைந்துள்ள இந்த பாலத்தின் வழியாக ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். அதேநேரம், மழை காலங்களில் இப்பாலத்தை பயன் படுத்த முடியாத நிலை உள்ளது. ஆகவே, இந்த தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்ற வேண்டும் என்று அரசு நிர்வாகத்திற்கு கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் மின் சாரத்துறை அமைச்சர் தங்கமணி தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்றிட அடிக்கல் நாட்டினார். ஆனால் இன்று வரை அதற்கான பணிகள் துவக்கப்பட்டவில்லை.   இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது, வருடந்தோறும் மழை அதிகளவு பெய்யும்போது தரைப்பாலம் முழு வதும் நீரில் மூழ்கிவிடுகின்றன. இதனால் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்வதால் பெரும் சிரமம்  ஏற்படுகிறது. மேலும், திருமணி முத்தாறு கடந்த மூன்று வருடங்களாக தூர்வாராப்படாமல் உள்ளதால் புதர்கள் மண்டி உள்ளது.  மேலும் பாலத்தின் கீழ் உள்ள குழாய்களில் மண் அடைத்து இருப்பதால் நீர் செல்ல  முடியாமல் பாலத்தின் மேல் செல் கிறது. எனவே மழை இல்லாத காலங் களில் திருமணிமுத்தாறு பாதைகளை தூர்வார வேண்டும் என தெரிவித்தனர்.  இதேபோல் பள்ளி மாணவி ஹரிணி என்பவர் கூறுகையில், மழை நீரில் தரைப்பாலம் மூழ்குவதால்  உரிய  நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடிய வில்லை. இந்நிலையில் பாலத்தை கடக்கும்போது கீழே விழுந்து புத்த கங்கள் நனைந்து கை, கால்களில் சிராய்ப்பு ஏற்படுவது போன்ற பல சிர மங்களை சந்தித்து வருகின்றோம் என வேதனையோடு தெரிவிக்கிறார்.