நாமக்கல்:
பிற நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி எச்சரித்துள்ளார்.
நாமக்கல்லில் மின்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சிறு குறு பெரிய தொழிற்சாலைகளில் குறைந்தபட்ச மின் கட்டண ரத்து தொடர்பாக முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்கப்பட்டதால் பிற நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். சிகிச்சை மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களை வாங்க ஒவ்வொருவரும் வாரத்துக்கு 2 முறை மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கும் 3 வண்ண அட்டைகள் வழங்கப்படவுள்ளன என்று தெரிவித்தார்.