நாமக்கல், ஜூன் 7 ராசிபுரம் அருகிலுள்ள கட்டநாயக் கம்பட்டி ஊராட்சியில் சுகாதாரமற்ற கோழிப் பண்ணைகளால் ஏற்படும் சுகாதார சீர்கேடு களில் இருந்து பொது மக்களை பாதுகாக்கக் கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அரு கிலுள்ள கட்டநாயக்கம்பட்டி ஊராட்சி அத்திப்பழகானூர் பகுதியில் காணப் படும் கோழிப்பண்ணைகளிலிருந்து துர்நாற்றம் வீசுவதாலும் மற்றும் அப்பண்ணைகளில் சுகாதார வசதி கள் போதுமான அளவில் செய்யப்படா ததாலும் அங்கிருந்து ஈக்கள் உருவாகி அருகாமை குடியிருப்புகளில் வாழும் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 2500க்கும் மேற்பட்ட பொதுமக்களை பாதிக்கிறது. குறிப் பாக முதியவர்களும், குழந்தைகளும் பல்வேறு நோய்த் தொற்றுகளுக்கு ஆளாகி அவதிப்பட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து ஊர்ப்பொது மக்களின் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கும், சுகா தாரத் துறை அதிகாரிகளுக்கும் பல முறை மனு கொடுத்தும் எவ்வித நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சுகாதாரத் துறையின் மூலம் சுகாதாரமற்ற ஈக்கள் உற்பத்தி யாக காரணமாக இருக்கின்ற கோழிப் பண்ணையாளர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுத்து உரிய சுகாதார வசதி கள் செய்து கொடுத்திட வேண்டும். ஊர டங்கு காலத்தில் வேலை இழந்து தவிக்கும் விவசாயத் தொழிலாளர் களை பாதுகாத்திட 100 நாள் வேலையை 200 நாள் ஆக மாற்றி தினக் கூலியாக ரூ.600 வழங்கிட வேண்டும். நலவாரிய உறுப்பினர்களுக்கு அறி வித்த நிவாரணத்தை தாமதமின்றி வழங்க வேண்டும். அறிவிக்கப்படாத மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.7500 நிவாரணம் வழங்கிட வேண்டும் என் பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அத்திப்பழகா னூர் பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில், ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் மாதேஸ்வரன் தலைமை தாங்கினார். நாமக்கல் மாவட்டச் செய லாளர் எஸ்.கந்தசாமி கோரிக்கை களை விளக்கிப் பேசினார். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமோ னோர் கலந்து கொண்டனர்.