tamilnadu

img

சத்துணவுத் திட்டத்தில் குழந்தைகளுக்கு ஆவின் பால் வழங்கிடுக கறவை மாடுகளுடன் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், செப்.28- சத்துணவுத் திட்டத்தில் குழந்தை களுக்கு ஆவின் பாலை வழங்கிடக் கோரி நாமக்கல் மாவட்டத்தில் பால் உற் பத்தியாளர்கள் 3 மையங்களில் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.  தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். சத்துணவுத் திட்டத்தில் குழந் தைகளுக்கு ஆவின் பாலையும் சேர்த்து  வழங்க வேண்டும். கால்நடை தீவனங் களை  50 சதவிகித மானிய விலையில் தமிழக அரசு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் 3 மையங்களில் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  பவித்திரம் புதூரில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் மு.து.செல்வராஜ் தலைமை வகித்தார். மணி, செல்லமுத்து, ராஜேந்திரன், தன பால், தமிழ்ச்செல்வன், கருப்பண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பி.சதாசிவம், மாவட் டத் தலைவர் ஏ.ஆர்.முத்துசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினார். இதேபோல், செவ்வந்திபட்டியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர் வாகி கே.பழனிமுத்து தலைமை வகித்தார். சிலமலை பி பெருமாள், நல்லதம்பி, முனி யாண்டி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.    முத்தூகாபட்டியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாகி எம்.அசோகன் தலைமை வகித்தார். இதில் அன்பரசு, பிரபாகரன், கந்தசாமி, சுந்தர மூர்த்தி, மணிவேல் ஆகியோர் கோரிக் கைகளை விளக்கிப் பேசினர்.  இந்த ஆர்ப் பாட்டங்களில் பால் உற்பத்தியாளர்கள் திர ளாக கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.