நாமக்கல், ஜூன் 01- நாமக்கல்லில் கொரோனா ஊர டங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட மக் களுக்கு நிவாரணம் கேட்டு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பூக்களை வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பூ விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வரும் விவசாயிகளுக்கு போதிய இழப்பீட்டை அரசு கணக்கிட்டு நிவா ரணமாக வழங்க வேண்டும். நல வாரியத்தில் உறுப்பினராக அல்லாத பழங்குடியினர் குடும்பங்கள் அனைத் திற்கும் பழங்குடியினர் வாரியம் நிவாரணம் வழங்கிட வேண்டும். விவ சாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது. ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள குடும் பங்களுக்கு நிவாரண நிதியாக ரூ. 7,500 வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முள்ளுக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில்,மார்க்சிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் எஸ். கந்தசாமி, ஒன்றிய செயலாளர் சின்ன சாமி, கிளை செயலாளர்கள் பழனிச் சாமி, துரைசாமி, மலைவாழ் மக்கள் சங்கம் மாவட்ட பொருளாளர் சண்மு கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.