வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி செப்.28ஆம் தேதியன்று திமுக தோழமை கட்சிகளின் சார்பில் நடைபெறும் போராட்டத்தை வெற்றிகரமாக்கும் வகை யில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. இதில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்எல்ஏ, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் தனபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக்குழு உறுப்பினர் மணிவேல், மதிமுக கணேசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள்பலர் கலந்து கொண்டனர்.