நாமக்கல், டிச.16- தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி நாமக் கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் திமுக கூட்டணி கட்சி தலை வர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பா ளர்கள் மனுதாக்கல் செய்தனர். திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றிய 5- ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேட்பாளராக சு.சுரேஷ் மனு தாக்கல் செய் தார். இம்மனு தாக்கலின்போது, திமுக ஊராட்சி செயலாளர் எஸ்.சுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி. மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஏ.ரங்கசாமி, ந.வேலுசாமி,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, காங்கிரஸ் கட்சி யின் மாவட்ட செயலாளர் பி.தங்கராஜ் மற்றும் சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். முன்னதாக, எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத் திலிருந்து ஊர்வலமாக சென்று மனுத்தாக்கல் செய்தனர். பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம் 12 ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக சித்ரா வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி. பெரு மாள், எம்.அசோகன், திமுக ஒன்றிய செயலாளர் யுவராஜ், சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எருமப்பட்டி ஒன்றியம், முத்தகாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராக சதா சிவம் வேட்பு மனு தாக்கல் செய்தார். மனு தாக்கலின்போது, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.பெருமாள் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர் பரமத்தி ஊராட்சி ஒன்றியம் 3ஆவது வார்டு நல்லூர் கிரா மம் உறுப்பினர் பதவிக்கு பி.தனசேகரன் வேட்பு மனு தாக் கல் செய்தார். இதில், திமுக ஒன்றிய செயலாளர் தன்ராஜ், சிபி எம் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.தங்கமணி, ஒன்றிய செயலாளர் கே.சண் முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.