திருச்செங்கோடு, ஆக.10- ஜம்மு - காஷ்மீர் தலைநகர் ஸ்ரீ நகருக்கு வெள்ளியன்று காலை சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் து.ராஜா ஆகி யோரை ஸ்ரீநகர் விமான நிலை யத்திலேயே தடுத்து நிறுத்தி நான்கு மணி நேரத்திற்கும் மேலாக சிறை வைத்த எதேச்சதிகார மோடி அரசை கண்டித்து சனியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவர்களில் ஒரு வரும், மத்தியக்குழு உறுப்பினரும் மற்றும் முன்னாள் ஜம்மு - காஷ்மீர் சட்ட மன்றத்தின் உறுப்பினருமான முகமது யூசுப் தாரிகாமியை நேரில் சந்தித்து அவரது உடல்நலன் குறித்து விசாரிப்பதற்கு சீத்தாராம் யெச்சூரியும், து.ராஜாவும் வெள்ளி யன்று காலை ஸ்ரீநகர் சென்றனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட கூறி விமான நிலையத்திலேயே சிறை வைக்கப் பட்டனர். மோடி அரசின் இச் செயலை கண்டித்து திருச் செங்கோடு அண்ணாசிலை அருகில் சனியன்று இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செய லாளர் ஐ.ராயப்பன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றிய செய லாளர் ஆர்.வேலாயுதம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ்.மணிவேல் ஆகி யோர் கண்டன உரையாற்றி னார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர குழு உறுப்பினர்கள் எஸ்.ஸ்ரீனிவாசன் , ஆர்.நடேசன், ஆர்.செந்தில்குமார் மற்றும் சிபிஐ நிர்வாகிகள் செல்வராசு, கிருஷ்ண சாமி உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.
பள்ளிபாளையம்
இதேபோல் நாமக்கல் மாவட் டம், பள்ளிபாளையம் காவேரி ஆர்எஸ் பேருந்து நிறுத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ஆர். ரவி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன், மாவட்ட குழு உறுப் பினர்கள் கே.மோகன், இ.கோவிந்த ராஜ், ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் முத்துக்குமார், காசிவிஸ்வ நாதன், சக்திவேல், முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.