நாமக்கல், ஜூலை 31- நாமக்கல்லில் உள்ள தொழிற்சாலைகளில் கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க அரசு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகள் பின்பற்றப் படுகின்றனவா என மாவட்ட ஆட்சியர் கா.மெக ராஜ் திடீர் ஆய்வு மேற் கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், நவனி ஊராட்சியில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி தயாரிக்கும் நிறு வனத்தில் பணியில் ஈடுபட்டுள்ள பணி யாளர்கள் தனிமனித இடைவெளியை கடை பிடிக்கின்றார்களா, முகக்கவசம் அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனரா என்றும், கிருமி நாசினி திரவம் வைக்கப்பட்டுள்ளதா என் றும் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ச.சக்தி கணேசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது, தொழிலாளர்கள் பணிக்கு வரு கையில் அவர்களது உடல் வெப்பநிலையை கண்காணிக்க தெர்மாமீட்டர் பயன்படுத்த வேண்டும். பணி நடைபெறும் இடங்களில் பணியாளர்களுக்கு முகக்கவசம் வழங்கி அவர்கள் தொடர்ந்து முகக்கவசம் அணி வதை உறுதி செய்யவும், தனிமனித இடை வெளியை கடைபிடிக்க வேண்டுமெனவும் தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் நாமக்கல் வட்டாட்சியர் பச்சைமுத்து உட்பட புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.