நாகர்கோவில்:
நெல்லை மாவட்டம் வடக்கு வள்ளியூர் பகுதியைசேர்ந்த டேனியல் என்பவரதுமகன் பீட்டர் மார்டின்(35). எம்.காம் பட்டதாரியான இவர்நெல்லை மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள், மாணவமாணவிகளுக்கு புராஜெக்ட் போன்றவை செய்து கொடுக்கும் சேவை நிறுவனம் நடத்திவருகிறார்.
தனது நிறுவனத்துக்கு வரும் கல்லூரி பெண்களை ஆசைவார்த்தை கூறியும் மிரட்டியும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நெல்லைமாவட்டம் கல்லிடைக்குறிச்சி உள்ள 20 வயது மதிக்கதக்க பட்டதாரி இளம்பெண் கடந்த வாரம் பீட்டர் மார்ட்டினின் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். இளம் பெண்ணின் குடும்ப சூழலை சாதகமாக பயன்படுத்திய பீட்டர் மார்ட்டின் அவரை ஆசை வார்த்தை கூறி வியாழனன்று இரவு சொகுசு காரில்நண்பர் ஒருவரையும் அழைத்து கொண்டு கன்னியாகுமரியில் உள்ள பிரபலநட்சத்திர ஓட்டலில் அறையை பதிவு செய்தனர்.ஓட்டலில் அறை கொடுக்காதஆத்திரத்தில் அங்குள்ள ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கன்னியாகுமரி காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின்பேரில் 3 பேரையும் பிடித்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பீட்டர் மார்ட்டின் தனது நிறுவனத்துக்கு வரும் பல இளம்பெண்களை ஆசைவார்த்தை கூறி அவர்களின் போட்டோவை வாங்கி முக்கிய புள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பாலியல் தொழில் புரோக்கராக இருந்தது தெரிய வந்தது.மேலும் பீட்டரின் செல்போனை ஆய்வு செய்த போது அதில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள், குடும்ப பெண்களின் ஆபாசபடங்கள் இருந்தன. இதையடுத்து பீட்டர் மார்ட்டினுடன் பிடிபட்ட சொகுசு காரை ஓட்டி வந்த ஓட்டுநர்மகாராஜன் மகன் லட்சுமணன் (27) உட்பட இருவரையும் விபச்சார தடை சட்டத்தின்கீழ் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து வெள்ளியன்று கன்னியாகுமரி காவல் துறையினர் கைது செய்தனர். ஓட்டுநர் லட்சுமணனுக்கு இன்னும் ஓரிரு நாளில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இளைஞர்களோடு பிடிபட்ட பெண்ணுக்கு தாய்-தந்தை யாரும் இல்லாததால் அப்பெண்ணை அரசு பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.கன்னியாகுமரியில் கைதான பீட்டர் மார்ட்டின், தான் அழைத்து வந்த பெண்ணை முக்கிய புள்ளிகளுக்கு பாலியல் தொழிலில்ஈடுபடுத்த முடிவு செய்து அழைத்து வந்ததாகவும் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு 5 மாணவிகளை அழைத்து வந்து குமரியைசேர்ந்த முக்கிய புள்ளிகளுக்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.