tamilnadu

img

உயிர்பலி வாங்கும் தேங்காப்பட்டணம் துறைமுகம்: மீனவர்கள் உண்ணாவிரதம்

நாகர்கோவில், ஜூலை 29- தேங்காப்பட்டணம் மீன்பிடி துறை முகத்தில் கடல் சீற்றத்தால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், தொடர் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறை முகத்தை மறு ஆய்வு செய்து துறைமுகத் தின் நுழைவு பகுதியில் அமைந்துள்ள மணல் மேடுகளை மணல் தோண்டும் இயந்திரம் மூலம் உடனடியாக அகற்ற வேண்டும்.  துறைமுகத்தை உயர் தொழில்நுட்ப வல்லுநர்கள், மீனவ பிரதிநிதிகள் இணைந்த குழு மூலம் ஆய்வு செய்து விபத் தில்லாத, இந்த பகுதியில் உள்ள கட்டு மரங்கள், நாட்டு படகுகள், விசைப்படகுகள் தங்கி தொழில் செய்யும் வகையில் மறு கட்டமைப்பு செய்ய வேண்டும் உள்ளிட்ட வை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மீனவர்க ளின் குடும்பத்தினர், மீனவர்கள், பெண்கள் முள்ளூர்துறை பகுதியில் புதனன்று கால வரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.