tamilnadu

img

குமரியில் குவிந்த பயணிகள்....

கன்னியாகுமரி:
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் உள்ளூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடு களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ஆனால் கொரோனா 2 ஆவது அலையின் ஊரடங்கு காரணமாக, கடந்த சில மாதங்களாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப் பட்டன. இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு, திங்கள் முதல் தியேட்டர்கள் மற்றும்சுற்றுலா தலங்களை திறக்க லாம் என அரசு அனுமதி அளித்துள்ளதையடுத்து, அதிகாலை முதலே கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் குவியத் தொடங்கி னர். மேலும் முக்கடல் சங்கமத்தில் நீராடி, சூரிய உதயத்தை கண்டு மகிழ்ந்த தோடு, கன்னியாகுமரியின் இயற்கை எழிலையும் ரசித்தனர்.
கன்னியாகுமரி கடலில்அமைந்துள்ள விவேகானந் தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், சுற்றுலாபயணிகள் அனுமதிக்கப் பட்டும், படகுகளை இயக்கஉயரதிகாரிகளிடம் இருந்துமுறையான உத்தரவு வரவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் படகுகளை தூய்மைப்படுத்தி கிருமிநாசினி தெளித்து தயார் நிலையில் வைத்துள்ளனர். உத்தரவு கிடைத்ததும் படகுகள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.