tamilnadu

நாகர்கோவில் மற்றும் நாகைப்பட்டினம் முக்கிய செய்திகள்

பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிக்கு  10 ஆண்டு சிறை 
நாகர்கோவில், மே 23-குமரி மாவட்டம், நித்திரவிளை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணின் கணவர் ஷாஜி இறந்து விட்டார். பால் கூட்டுறவு சங்கத்தில் பணிபுரிந்து வந்தபெண் , தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு, அக்டோபர் 24 ஆம் தேதி அதிகாலை பணிக்கு சென்றார். அப்போது, கிராத்தூர் கொப்பரவிளை பகுதியில் வைத்து, அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (29) என்பவர் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி தாக்கியதோடு, மறைவான இடத்துக்கு கொண்டு சென்று பாலியல் வல்லுறவு செய்து விட்டு தப்பியோடினார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரில் பேரின் நித்திரவிளை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ராஜேஷை கைது செய்தனர். இந்த வழக்கு குழித்துறை விரைவு மகளிர் முகாம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜாண் ஆர்.டி.சந்தோஷம் புதனன்று தீர்ப்பளித்தார். அப்போது குற்றவாளி ராஜேசுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

சிறுமிக்கு வன்கொடுமை முதியவர் மீது வழக்கு
சீர்காழி, மே 23-நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமியின் தாய் 3 வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில், அச்சிறுமிதனது பாட்டி வீட்டில் தங்கி 1-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளி விடுமுறை விடப்பட்டதால், சிறுமியை பெரியப்பா ரவி (60) அழைத்துச் சென்று, கடந்த 10 நாட்களாக தன்னுடன் தங்க வைத்து, பின்னர் செவ்வாயன்று பாட்டி வீட்டில் விட்டு விட்டார். சிறுமி உடல்நிலைசரியில்லை என கூறியதையடுத்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவ சோதனைக்குப்பின், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், போலீசார்வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.