தரங்கம்பாடி, ஜன.9- தில்லி ஜேஎன்யு மாணவர் சங்க தலைவர்கள் மீதும், பேராசிரியர்கள் மீதும் கொடூரத் தாக்குதல் நடத்திய ஏபிவிபி குண்டர்களை கைது செய்ய வலியுறுத்தியும், போதிய பேராசிரியர் கள் இல்லாமல் மாணவர்கள் பாதிக் கப்படுவதற்கு தமிழக அரசு உடனடி யாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மயிலாடுதுறை மணல்மேடு கல்லூரி யில் வகுப்பு புறக்கணித்து போராட்டம் நடைபெற்றது. மாணவர் சங்க மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் செ.கபி லன், வட்டத் தலைவர் த.கவியரசன், கல்லூரி நிர்வாகிகள் க.கலைச்செல் வன், சந்தோஷ், வேல்முருகன் ஆகியோர் உரையாற்றினர்.