தரங்கம்பாடி, ஆக.7 - நாகப்பட்டினம் மாவட்டம் பொறையார் த.பே.மா.லு கல்லூரியின் 48-வது ஆண்டு விளையாட்டு விழா புதனன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜீன் ஜார்ஜ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், திருவண்ணாமலை மாவட்ட தடகள பயிற்சியாளர் பிரத்தீஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களை யும் வழங்கி உரையாற்றினார். உடற்கல்வி இயக்குநர் ஸ்ரீதர் தங்கத்துரை ஆண்டறிக்கை வாசித்தார். துணை முதல்வர் ஜோயல் எட்வின்ராஜ் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாண வர்கள் கலந்து கொண்டனர்.