நாகப்பட்டினம், மார்ச் 17- நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில், சியா மரைக்காயர் தெருவின் ஒரு பகுதிக்கு ‘நாகூர் ஷாஹின் பாக்’ எனப் பெயரிட்டுக் கடந்த 18 நாட்களாக இஸ்லாமிய மக்கள், ஜமாத்தார்கள், பல்வேறு இயக்கத்தினர் ஒன்றி ணைப்பின் சார்பில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்ட சட்டங்க ளுக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்றது. திங்கட்கிழமை இரவு, போராட்டச் சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் பங்கேற்றார். கூட்டத்திற்கு ஆர்.கே.அப்துல்ரசீது தலைமை வகித்தார். நாகை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.ஜி.கே.நிஜா முதீன் வரவேற்புரையாற்றினார். உலகத் தமிழர் பேரமைப்பின் நிறுவ னரும் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவருமாகிய பழ.நெடுமாறன் சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடியுரிமைப் பதிவேடு, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு ஆகிய இந்த மூன்று கொடிய சட்டங்க ளும் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட இந்திய மக்களைத் தாக்க வரும் மூன்று முனைகளையுடைய இந்துத்வா வின் திரிசூலமாகும். அந்தக் காலங்களில், பிள்ளைப் பேறு நிகழ்வு வீடுகளில் தான் நடக்கும். அந்தந்த ஊரில் உள்ள மருத்து வப் பெண் தான் பிள்ளைப் பேறு பார்ப்பார். அப்பன், பாட்டன் ஆகியோ ரின் பிறந்த நாள், பிறந்த இடம் கேட்டால் எப்படிக் கொடுப்பது? மலையின மக்களும் நாடோடி மக்க ளும் என்ன சான்றுகளைக் கொடுக்க முடியும்? இரண்டாம் உலகப் போரின் போது, ஐரோப்பா முழுவதும் 20 லட்சத்திற்கு மேற்பட்ட யூதர்கள் ஹிட்லரின் படை வீரர்களால் படுகொலை செய்யப் பட்டார்கள். போரின் முடிவின் போது, ஐரோப்பாவில் வாழ்ந்த யூத மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் கொல்லப்பட்டனர். 1935 ல், இதே போல், ஜெர்மனியில் ஹிட்லரால் குடியுரிமைச் சட்டம் கொண்டு வரப் பட்டு, யூத மக்களின் குடியுரிமை, சொத்துக்கள் பறிமுதல் செய்யப் பட்டன. இந்தக் கொடூரக் கெடுபிடி களால் 37000 யூதர்கள் ஜெர்மனி யிலியிலிருந்து துரத்தப்பட்டனர். இந்தக் கொடிய திரிசூலச் சட்டங்களை பா.ஜ.க. அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் இப்படிப்பட்ட போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரமாகப் பரவும். இவ்வாறு பழ.நெடுமாறன் குறிப்பிட்டார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ந.காவியன் நிறைவுரை யாற்றினார். நாகூர் சித்திக் நன்றி கூறினார். நாகூரில் தொடர்ந்து 18 நாட்கள் நடைபெற்ற போராட்டம், போராட்ட ஒருங்கிணைப்புக் குழு முடிவின்படி, போராட்டம் ஒத்திவைக்கப் பட்டுள்ள தாக அறிவிக்கப்பட்டது. (ந.நி)