சீர்காழி, அக்.25- வரும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் சம்பா பயிர் காப்பீடு செய்து கொள்ள விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குநர் அறி வுறுத்தியுள்ளார். நாகை மாவட்டம் கொள் ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவ லகத்தில் நடைபெற்ற நிகழ் ச்சியில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு குறித்து விழிப்பு ணர்வு துண்டு பிரச்சுரங்க ளை வேளாண் உதவி இயக்கு நர் சுப்பையன் விவசாயிக ளுக்கு வழங்கி பேசுகையில், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு எதிர்பாரா மல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி வழங்கி பாதுகாத்திட காப்பீட்டு நிறுவனம் சார்பில் பயிர் காப்பீடு செய்து கொள்ள விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி சம்பா நெற் பயிர் செய்து கொள்ள விவசா யிகள் வரும் நவம்பர் 30-ந் தேதிக்குள் தொடக்க வேளா ண்மைக் கூட்டுறவு வங்கி, தேசிய வங்கி மற்றும் பொது சேவை மையம் ஆகியவைக ளில் தங்களின் விருப்பத்தின் பேரில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ள லாம். ஒரு ஏகக்ருக்கு 25 சதவீதமும் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம் மேலும் வங்கிக்கடன் பெற்ற விவசாயிகள் காப்பீட்டு திட்டத்தில் கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும். விவசாயிகள் இத்திட்டத் தில் பதிவு செய்து கொள்ளும் போது முன்மொழி விண் ணப்பத்துடன் பதிவு விண் ணப்பம், கிராம நிர்வாக அலு வலர் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகம், ஆதார் அட்டை நகல் ஆகிய வற்றைப் பதிவு செய்து கொண்டு அதற்கான ரசீதைக் கட்டாயம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.