நாகப்பட்டினம், ஜன.22- நாகை மாவட்டம், திருமெய் ஞானம் தியாகிகள் அஞ்சான் –நாகூ ரான் 38-ஆம் ஆண்டு நினைவுப் பொதுக்கூட்டம், ஞாயிறு முன்னிரவு, திருக்கடையூர் சன்னதித் தெருவில் நடைபெற்றது. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற் குழு உறுப்பினரும் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாநிலப் பொதுச் செய லாளருமாகிய பெ.சண்முகம் சிறப்பு ரையாற்றியபோது, “கடந்த மூன்றாண் டுகளில் மட்டும், 100 நாள் வேலைத் திட்டத்தில், தமிழகம் முழுவதும் அதி காரிகள் அடித்த கொள்ளை ரூ.4000 கோடி, எனக் கூறியபோது, மக்கள் கூட்டம் அதிர்ச்சியுற்றது. திருமெய்ஞானம் தியாகிகள் நினைவிடத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு சி.பி.எம். தரங்கம்பாடி வட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பி னருமான நாகைமாலி செங்கொடி யை ஏற்றி வைத்தார். பெ.சண்முகம், வி.தொ.ச. மாநிலப் பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங் கம், சிஐடியு மாநிலச் செயலாளர் இ. முத்துக்குமார், தஞ்சை ஆர்.மனோ கரன், சிஐடியு திருவாரூர் மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.வைத்திய நாதன், உள்ளிட்ட தலைவர்கள், வெகு ஜன இயக்கத்தினர், பொதுமக்கள் மலர் தூவியும் வீர வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து, அன்று முன்னிரவில், திருக்கடையூர் சன்னதித் தெருவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பி.சீனி வாசன் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். முன்னதாக, மக்களிசைப் பாடகர் எஸ்.மோகன் இங்கர்சால் இயக்கப் பாடல்கள் பாடினார். கட்சி யின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி.சிம்சன், ஜி.கலைச் செல்வி, டி. இராசையன், ஏ.ரவிச்சந்திரன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். வட்டக் குழு உறுப்பினர் டி.கோவிந்தசாமி வர வேற்புரையாற்றினார். கட்சியின் மாவட்டச் செயலாளர் நாகைமாலி, வி.தொ.ச. மாநிலப் பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங் கம், சி.ஐ.டி.யு. மாநிலச் செயலாளர் இ. முத்துக்குமார், சி.பி.எம். தஞ்சை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். மனோகரன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். வி.ச. மாவட்டச் செயலா ளர் எஸ்.துரைராஜ், வி.தொ.ச. மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஜெயராமன், சி.வி.ஆர்.ஜீவா னந்தம், எம்.முருகையன், வி.சிங்கார வேலன், பி.மாரியப்பன், சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் சீனி.மணி, மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் டி.கணேசன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.அமுல் காஸ்ட்ரோ உள்ளிட்டோர் உரையாற்றி னர். தியாகிகள் அஞ்சான், நாகூரான் நினைவு தினமான தொழிலாளர் தினத் தில், கடந்த 38 ஆண்டுகளாக, தமிழ் நாடு, விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் இவற்றின் வளர்ச்சிக்காகத் தமிழ்நாடு சி.ஐ.டி.யு. சார்பில், தொழிலாளர்கள் ஒவ் வொருவரிடமும் ஒரு ரூபாய் எனப் பங்களிப்பின் மூலமாகத் திரட்டிய ஒரு பெரும் தொகையை ஆண்டுதோறும் இந்த நாளில் வழங்கி வருகிறது. அது போல், இந்த ஆண்டின் நிதியாக ரூ.3 லட்சத்து, 50 ஆயிரம் நிதியை மேடையில் சி.ஐ.டி.யு. மாநிலச் செயலாளர் இ.முத்துக்குமார் வழங்க, பெ.சண்முகம் பெற்றுக் கொண்டார். அன்னப்பன்பேட்டை, சிவன் கோயில் தெருவைச் சேர்ந்த இளை ஞர்கள் எஸ்.விஜயகுமார், என்.சிவ சங்கரன், டி.தர்மதுரை, ஆர்.அர விந்தன், ஆர்.விக்னேஷ் உள்ளிட் டோர் மேடைக்கு வந்து சி.பி.எம். கட்சியில் இணைந்தனர். அவர்களைப் பாராட்டித் தலைவர்கள் துண்டு அணி வித்து கெளரவித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் நிறைவுரையாற்றிய போது, கூறியதாவது: “கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் தான் ஓயாமல் போராட்டம் மக்க ளுக்காக நடத்துவோம். ஆனால், கடந்த ஒரு மாதமாக, இந்திய நாடெ ங்கும், பொதுமக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப் போராட்டம் நடக்காத நாளில்லை. குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள் கணக்கெடுப்பு போன்ற மக்களுக்கு எதிரான கொடிய சட்டங்களை எதிர்த்து மக்கள் போராடி வருகிறார்கள். உங்கள் வீடுகளுக்கு இப்படிக் கணக்கெடுக்க வந்தால், “நீ இந்தியக் குடிமகனா? மோடி இந்தியக் குடி மகனா?” எனறு கேள்வி கேளுங்கள். இன்று கம்யூனிஸ்ட் கட்சிக்கு 100 ஆண்டு ஆகிறது. காரல் மார்க்சும் ஏங்கல்சும் வழங்கிய அறிவியல் தத்து வத்தின் அச்சில் தான் இந்த உகலம் இயங்கிக் கொண்டிருக்கிறது. சென் னையில் நடைபெறவிருக்கும் சிஐ டியு அகில இந்திய மாநாட்டில் மார்க்சும் ஏங்கல்சும் அளித்த கம்யூ னிஸ்ட் கட்சியின் அறிக்கை என்னும் அந்த அரிய பொக்கிச நூல் ஒரு லட்சம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு மக்களிடம் செல்லத் தயார் நிலையில் உள்ளன. அந்த நூலை ஒருமுறை அல்ல, 10, 20 முறை மீண்டும் மீண்டும் படி யுங்கள். “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்- வீணில் உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்” என்றான் பாரதி. ஆனால் இங்கே உழவர்களுக்கு வாழ்வாதாரம் கிடைப்பதில்லை. கேரளத்தில் விவ சாயிகள் விளைவித்த நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.2630 வழங்கு கிறது. ஆனால், தமிழகத்தில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு வெறும் ரூ. 1200 என வழங்குகிறது. கேரள முதல்வர் சொல்லியிருக்கிறார், தமி ழத்தின் விவசாயிகள் விளைவித்த நெல்லை இதே விலை கொடுத்து நாங் கள் வாங்கிக் கொள்கிறோம் என்று. உள்ளாட்சி நடைபெறாமல் இருந்த கடந்த 3 ஆண்டுகளில் 100 நாள் வேலை என்ற பெயரில் ஏழை எளியவர்களை ஏமாற்றி ரூ.4 ஆயிரம் கோடி கொள்ளை யடித்திருக்கிறார்கள். இது மெகா ஊழல். கம்யூனிஸ்டுகள் எதற்கெடுத்தாலும் போராடுகிறார்கள் என்று பலர் சொல்வார்கள். ஆனால் தற்போது தான் போராட்டத்தின் வலிமை தெரிய ஆரம்பித்துள்ளது. மக்களுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டு வரும் மத்திய- மாநில ஆட்சிகளை வீழ்த்துவோம்”. இவ்வாறு பெ.சண்முகம் பேசி னார்.