tamilnadu

img

சாலையை சீரமைத்து தரக் கோரிக்கை

சீர்காழி, டிச.7- நாகை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் திட்டை ஊராட்சி கற்பகம் நகரில் உள்ள குடிநீர் குழாயில் குடிநீர் ஒரு நாள் வந்தால் ஒன்பது நாட்களுக்கு குடிநீர் வருவதில்லை என்று அப் பகுதி மக்கள் பல முறை புகார் அளித்தும் இது வரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. மேலும் சாலை ஓரங்களில் புதியதாக குடிநீர் குழாய் போடுவதற்கு பள்ளம் தோண்டப்பட்டு சாலையில்  சேறும் சகதியுமாக உள்ளது. உடனடியாக சாலையை சரி செய்து தொடர்ந்து குடிநீர் வழங்க வேண்டும் என்பதே அப்பகுதி   மக்களின் கோரிக்கையாக உள்ளது.