tamilnadu

புதிய மின்மாற்றி அமைத்து தரக் கோரிக்கை

சீர்காழி ஜூலை-14 நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள திருஞானசம்மந்தம், கூட்டுமாங்குடி, மாணிக்கவாசல் ஆகிய கிராமங்களில் 120 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மின் மாற்றியின் மூலம் குறைந்த சக்தி கொண்ட மின்சாரம் அளிக்கப்படுவதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அவதியடைந்து வருகின்றனர். வீடுகளில் உள்ள மின் விளக்குகள் மங்கலாக உள்ளதால் போதிய வெளிச்சம் கிடைக்கவில்லை. மின்விசிறிகள், குளிர்சாதனப் பெட்டி, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட மின் சாதனப் பொருட்கள் இயங்காத நிலையிலும், பழுதாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.  போதிய மின் விளக்கின் ஒளி கிடைக்கா ததால், பள்ளி மற்றும் கல்லூரி மாண்வர்கள் இரவு நேரங்களில் பாடங்களை படிக்க முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். குறைந்த மின்சக்தியால் தண்ணீருக்காக பயன்படுத்தும் மின்மோட்டார்களும் இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குறைந்த மின் சக்தியை போக்கும் வகையில் புதிய மின் மாற்றி அமைத்து போதிய மின்சாரம் வழங்க நடவடி க்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.