tamilnadu

img

மோட்டார் வாகனச் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

தரங்கம்பாடி, ஆக.27- நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மோட்டார் வாகன தொழில் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் கார், வேன், ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.ரவீந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மோட்டார் வாகன சட்டத்திற்கெதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் சீனி.மணி, மின் ஊழியர் அமைப்பின் திட்ட செயலாளர் கலைச்செல்வன், சிஐடியு மாவட்டத் துணை தலைவர் துரைக்கண்ணு, துணைச் செயலாளர் மாரியப்பன், இரு சக்கர வாகன பழுது பார்போர் முன்னேற்ற நலச்சங்கத்தின் நிர்வாகிகள் ராமு, பகவதிகுமார் கண்டன உரையாற்றினர்.