நாகப்பட்டினம், ஜூலை 21- தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க கீழ்வேளூரில் ஒன்றியப் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற் றது. ஒன்றியத் தலைவர் எஸ்.அரு ளேந்திரன் தலைமை வகித்தார். ஒன் றிய நிர்வாகிகள் எஸ்.ஞானசேகர், என்.பாலசுப்பிரமணியன், ஆர்.லல்லி, டி.சகிலா, என்.ஜமுனாராணி, எம்.குமாரவேல், எஸ்.மைதிலி, ராஜாத்தி, ராணி ஆகியோர் முன்னிலை வகித்த னர். ஒன்றியத் துணைத் தலைவர் கே. கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் ஏ.டி.அன்பழகன் துவக்கவுரை யாற்றினார். ஒன்றியச் செயலாளர் எஸ்.முருகையன் வேலை அறிக்கையும், பொருளாளர் எஸ்.மரியபிரகாசம் நிதி நிலை அறிக்கையையும் முன்வைத்த னர். ஒன்றியச் செயற்குழு உறுப்பி னர்கள் பி.பாண்டியன், என்.தேவேந்தி ரன், ஆர்.ஜெயக்குமார், டி.பால கிருஷ்ணன், கே.மனோகர், ஜி.வள்ளி யம்மை, டி.செந்தாமரை, சி.வேம்பு, டி. அமுதா, எஸ்.சித்ரா, ஜெ.ராஜாத்தி ஆகி யோர் தீர்மானங்களை முன்மொழிந் தனர். மாவட்ட நிர்வாகிகள் என்.புக ழேந்தி, கே.பாலாம்பாள், எஸ்.சித்ரா, எஸ்.துர்காம்பிகா, சி.வாசுகி, அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் எஸ்.மோகன் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டச் செயலாளர் கே.ராஜூ, மாவட்டத் தலைவர் வி.தேன்மொழி ஆகியோர் சிறப்புரையாற்றினர். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ப.அந்துவன் சேரல் நிறைவுரையாற்றினார். ஒன்றி யப் பொருளாளர் எஸ்.மரியபிரகாசம் நன்றி கூறினார். கூட்டத்தில், கீழ்வேளூர் பேரூராட்சி யில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும், அஞ்சுவட்டத்தம்மன் மகளிர் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.