திருச்சிராப்பள்ளி, ஆக.17- தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க உட்கோட்ட பேரவை கூட்டம் திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெற்றது. உட்கோட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். உட்கோட்டை தலைவர்கள் செல்லதுரை, மாதேஸ்வரன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க இணைச் செயலாளர்கள் ராஜேந்திரன் முருகேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், சாலை பணியாளர்கள் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து ஆணை வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வி திறன் பெற ஊழியர்கள் ஊதிய மாற்றம் மாற்றி அமைக்கப்பட்டு நிர்ணயம் செய்ய வேண்டும். சாலை பராமரிப்பு பணியை தனியார் பராமரிக்கும் கொள்கை முடிவை தமிழக அரசு திரும்ப பெறவேண்டு உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட இணை செயலாளர் மணிமாறன் நன்றி கூறினார்.