தரங்கம்பாடி ஆக.25- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கருத்தரங்கம் மயிலாடுதுறை வட்ட செயலாளர் அறிவழகன் தலைமையில் சனியன்று மாலை நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத்தலைவர் ரெஜிஸ்குமார், புதிய கல்விக் கொள்கை குறித்தும், இலக்கை நோக்கி என்ற தலைப்பில் மாவட்டத் துணைத்தலைவர் கே.பி.மார்க்ஸ் ஆகியோர் உரையாற்றினர். தரங்கம்பாடி வட்டத் தலைவர் வீ.எம்.சரவணன், குத்தாலம் ஒன்றியத் தலைவர் ஆர்.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.