tamilnadu

img

சீர்காழியில் 50-க்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர்....

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்புபேரவைக் கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.வி.ஆர்.ஜீவானந்தம் தலைமையில் செவ்வாயன்று நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், எம்.கரிகாலன், கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே.நாகையா, சி.ராஜேந்திரன், ஆர்.நீலமேகம்,கே.அசோகன், எஸ்.கபிலன் பி.என்.ராஜலட்சுமி, ஞானப்பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.பேரவையில் சீர்காழி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இளங்கோவன், பிரபாகரன் ஆகியோர் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். புதிதாக கட்சியில் இணைந்தவர்களை மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.