நாகப்பட்டினம், ஏப்.7-
நாகை நாடாளுமன்றத் தொகுதி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளர் எம்.செல்வராஜை ஆதரித்து, நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம், திருப்பூண்டி கடைத்தெருவில் சனிக் கிழமை பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தி.மு.க. கீழையூர் ஒன்றியச் செயலாளர் ஏ.தாமஸ் ஆல்வா எடிசன் தலைமை வகித்தார். முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ப.கோவிந்தராஜன், க.ராஜேந்திரன், ஏ.எஸ்.மோகன், ஜி.கே.கனகராஜ், ஏ.எம்.ஜபருல்லா, வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன், எஸ்.செய்யதுரியாசுதீன், எஸ்.குமரேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சி.பி.ஐ. மாவட்டச் செயலாளர் அ.சீனிவாசன் வரவேற்புரையாற்றினார்.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான தா.பாண்டியன், சி.பி.எம். மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பின ருமான வி.மாரிமுத்து, சி.பி.ஐ.தேசி யக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான கோ.பழனிச்சாமி, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க. முன்னாள் அமைச்சருமான உ.மதிவாணன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைச் சார்ந்த பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் தா.பாண்டியன் பேசியதாவது: இஸ்லாமியர்கள், தலித்து கள், பிற்படுத்தப்பட்டோர் எனப் பெரும்பான்மை மக்கள் இந்தத் திருப்பூண்டியில் சகோதரத்துவமாக. ஒன்றிணைந்து வாழ்கிறீர்கள்.
மக்களின் இந்த ஒற்றுமையைக் குலைப்பது தான் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. இந்துத்துவப் பரிவாரங் களின் முதற்பணி. மோடி குஜராத் முதல்வராக இருந்த போது, இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட இஸ்லாமிய மக்களைப் பலியிட்டு தான், அந்த ரத்த வாடை வீசும் சிம்மாசனத்தில் தான் கடந்த ஐந்து ஆண்டுக் காலமாக மோடியின் கொடுங்கோலோச்சு கிறார்.மோடியின் ஆட்சியில் ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள், முற்போக்குச் சிந்தனைவாதிகள், தலித் மக்கள் உள்ளிட்டோர் இந்து மத வெறியர்களால் கொல்லப்பட்டி ருக்கிறார்கள். மோடி மிகக் கொடிய மதவெறி பிடித்த பாசிசவாதி. மோடியை இந்தத் தேர்தலில் வீழ்த்த வேண்டியது நமது முதற்கடமை என்பதை மறவாதீர்கள்.உலக வரலாற்றில் ஒரு மதத்திற்குத் தலைவராகவும் அதே சமயம் அரசாட்சியின் தலைவராகவும்இருந்தவர் முகமது நபி ஒருவர் மட்டுமே. ஒரு சமயம், நபியைப் பார்த்து ஒருவர் கேட்டார்; ‘‘நபிஅவர்களே! நீங்கள் மதத்திற்கும் ஆட்சிக்கும் தலைவராக விளங்கு கிறீர்கள். உங்களிடம் பிற மதத்தைச்சேர்ந்த ஒருவர் ஒரு வழக்கு நிமித்தம்உங்களிடம் நீதி கேட்டு வரும்போது, எப்படி சரியான நியாயம் வழங்கு வீர்கள்?’’ என்று கேட்டார் அப்போது, முகமதுநபி கூறினார், ‘‘இரண்டு கண்கள் இரண்டு காட்சிகளைப் பார்ப்பது கிடையாது. அதேபோல், நான் மதங்களைப் பார்ப்பது கிடையாது. ஒரே பார்வை, ஒரே நீதிதான். அதுதான் சமத்துவ நீதி’’ என்றார். இந்தச் சம்பவத்தை மோடியின் ஆட்சியில் ஒப்பிட்டுப் பாருங்கள்! இஸ்லாமியர்களை தேச விரோதிகளாகப் பார்க்கிறார்கள். மாட்டுக் கறி சாப்பிட்டால் தலித்து களைக் கொல்கிறார்கள்.ஊழலில் திளைத்துள்ள எடப்பாடிஅரசின் அமைச்சர்கள் இன்று தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மோடி, அமித்சாவின் காலடியில் வீழ்ந்து கிடக்கிறார்கள். இதை அதிமுக காரர்களே விரும்பவில்லை. ஏப்ரல்- 16 வரை அதிமுககாரர்கள் அங்கு இருந்து விட்டுப் பிறகு, ஏப்ரல்-18 அன்று, நமக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள்.மே-23 க்குப் பிறகு மத்தியிலும் தமிழகத்திலும் மோடி, எடப்பாடி ஆட்சிகள் வீழப்போவது உறுதி’’. இவ்வாறு தா.பாண்டியன் பேசினார். தி.மு.க. வின் மு.ப.ஞானசேகரன் நன்றி கூறினார்.
(ந.நி.)