tamilnadu

கொள்ளிடத்தில் வணிகர் சங்க பேரவை கொடியேற்ற தடை

சீர்காழி ஜூலை 25- கொள்ளிடத்தில் வணிகர் சங்க பேரவை கொடியேற்ற போலீசார் தடை விதித்ததால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர் நாகை மாவட்டம் கொள்ளிடம் கடை வீதியில் கொள்ளிடம் வியாபாரிகள் சங்கம் சார்பில் நடைபெற இருந்த கொடியேற்று விழா வில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலை வர் விக்கிரமராஜா கலந்து கொண்டு கொடி யேற்றுவதாக இருந்தது. பல இடங்களில் வணிகர் சங்க கொடியை ஏற்றி வைத்து விட்டு கொள்ளிடம் வந்த விக்கிரமராஜா கொள்ளி டம் கடைவீதியில் நடைபெற்ற தெரு முனை கூட்டத்தில் பேசியபோது, கொள்ளிடம் கடைவீதியில் வணிகர் சங்க கொடி யேற்றுவதாக இருந்தது. ஆனால் கொள்ளிடம் காவலர்கள் கொடி யேற்றுவதற்கும், பட்டாசு வெடித்து வர வேற்பதற்கும் அனுமதி மறுத்துள்ளார்கள். இது ஏனென்று தெரியவில்லை. மேலும் நாங்கள் பேரவை கொடியை பல்வேறு இட ங்களில் ஏற்றி வைத்தும்,இங்கு மட்டும் போலீ சார் ஏன் தடை விதித்தார்கள் என்று தெரிய வில்லை என்றார். சாதாரண தெருவோர சிறு வியாபாரிகள் கூட உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி 100ரூபாய் கொடுத்து லைசென்ஸ் வாங்கி யிருக்கவேண்டும். அவ்வாறு வாங்காத வியா பாரிகள் மீது 5லட்சம் ரூபாய் அபராத மும்,6மாதம் சிறைத்தண்டனையும் வழங்குவ தாக சட்டம் உள்ளது.இது வயிற்றுப்பாட்டு க்காக வியாபாரம் செய்யும் நடைபாதை வியா பாரிகளை பாதிப்பதாக உள்ளது.இதனை  நாம் எதிர்க்க வேண்டும்.மேலும் ஆன்லைன்  வர்த்தகம் பரவிவருவதால் சிறு குறு வியாபா ரிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படு வார்கள் எனவே உங்களுடைய ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமையை கொண்டுதான் இதை தடுக்கமுடியும். விரைவில் ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து டெல்லியில் மிகப்பெரிய மாநாடு நடத்தப்படும் என்றார். இக்கூட்டத்தில் நாகை மாவட்ட தலை வர் தமிழ்செல்வன், கொள்ளிடம் வியாபாரி கள் சங்க தலைவர் இராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் கலியபெருமாள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கமாலு தீன் மற்றும் வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.