tamilnadu

தரங்கம்பாடியில்  நிலவேம்பு கசாயம் வழங்கல்

தரங்கம்பாடி, அக்.23- நாகை மாவட்டம்,தரங்கம்பாடி பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு முகாம் தலைமையாசிரியர் ஜான் சைமன் தலைமையில் செவ்வாய்யன்று நடைப்பெற்றது.  தரங்கம்பாடி அரசு மருத்துவமனை சித்தமருத்துவர் கௌசிகா கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு ஆலோசனை களையும்,சுற்றுப்புற தூய்மையின் அவசியம் குறித்தும் உரையாற்றினார். பின்னர் தரங்கம்பாடி பேரூராட்சி சார்பாக மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் நெடுஞ்செழியன்,சுகாதார ஆய்வாளர் சுப்ரமணியன் மற்றும் பேரூராட்சி ஊழி யர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.