tamilnadu

img

ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரி தனியார் பள்ளி ஆசிரியர்கள் பட்டினி போராட்டம்

தரங்கம்பாடி, ஜூலை 11- நாகை மாவட்ட நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலைப் பள்ளி மற்றும் சி.பி.எஸ்.சி சங்க தலைவர் குடியரசு தலைமையில் செம்பனார்கோவில் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகு லேஷன் மற்றும் சிபிஎஸ்சி பள்ளி சங்கம் சார்பில் நாகை மாவட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் அர சின் கவன ஈர்ப்பு ஏற்படுத்தும் வகையில்  ஒருநாள் பட்டினி போராட்டத்தில் ஈடு பட்டனர்.  செம்பனார்கோவிலில் உள்ள கலை மகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தனியார் பள்ளியின் நாகை மாவட்ட தலைவர் குடியரசு தலைமையில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு அரசு உதவ முன்வர வேண்டும், கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் அரசு தர  வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், தனியார் பள்ளி ஆசி ரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வாழ்வாதராமாக நிவாரணம்  ரூ. 10  ஆயிரம் வழங்க வேண்டும்.

தனியார்  பள்ளிகளுக்கென வாரியம் ஒன்று அமைக்க வழி வகுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியு றுத்தி ஒரு நாள் பட்டினி போராட்டம் நடை பெற்றது. இதில் 150-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் பேராவூரணி டாக்டர் ஜே.சி.கும ரப்பா பள்ளி வளாகத்தில் நடைபெற்ற  போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித்தார். உடையநாடு-வீரியங்கொட்டை ராஜரா ஜன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில்  தாளாளர் மனோன்மணி ஜெய்சங்கர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. பட்டுக்கோட்டை வட்டம் புதுக்கோட்டை  உள்ளூர் கிராமத்தில் ஆக்ஸ்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளா கத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு, சங்கத்தின் பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமை வகித்தார்.