நாகப்பட்டினம், டிச.17- நாகை மாவட்டம், செம்பனார் கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஆவது மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு கட்சியின் மாதர் சங்க வட்ட செயலா ளர் ராணி போட்டியிடுகிறார். இவர் மாதர் சங்கத்தின் நடைபயணத்தில் பங்கேற்றவர். இவரது கணவர் டி.ராசையன் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினராக உள்ளார். ஏற்கனவே இலுப்பூர் ஊராட்சியின் தலைவராக வகித்துள்ளார். திருவிளையாட்டம் 23 ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், தரங்கம்பாடி வட்டச் செயலாளரு மான பி.சீனிவாசன் போட்டியிடுகி றார். பிள்ளைப்பெருமாநல்லூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு கட்சி யின் மாவட்டக்குழு உறுப்பினரும், மாதர் சங்க மாநில துணைத் தலைவ ருமான ஜி.கலைச்செல்வி போட்டியி டுகிறார். இவர் ஏற்கனவே ஒன்றிய கவுன்சிலராக வெற்றிப் பெற்றவர். கீழையூர் 4 ஆது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு கட்சியின் வட்டக்குழு உறுப்பினரும், வாலிபர் சங்க வட்டச் செயலாளர் கே.பி.மார்க்ஸ் போட்டியிடுகிறார். நரசிங்க நத்தம் 21 ஆவது வார்டு ஒன்றிய கவுன் சிலர் பதவிக்கு கட்சியின் மூத்த தலை வர் ஆர்.தம்புசாமி போட்டியிடுகி றார். இவர் ஏற்கனவே ஒன்றிய கவுன்சி லராக வெற்றிப் பெற்றவர். திருக்கடையூர் ஒன்றிய கவுன்சி லர் பதவிக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வட்டத்தலைவர் ஜி.இளையராஜா போட்டியிடுகிறார். இலுப்பூர் பகுதி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஆர்.சாந்தி என்பவர் போட்டியிடுகிறார்.
நாகை ஒன்றியம்
நாகை மாவட்ட ஊராட்சி வார்டு கள் பதவிக்கு- வார்டு 15- ப.சுபாஷ் சந்திரபோஸ், வார்டு 16- எஸ்.சுபாதேவி, வார்டு 17 ஜெ.செல்வி, வார்டு 10-ஆர்.ராணி. ஊராட்சி ஒன்றியங்கள்- தலை ஞாயிறு ஒன்றியம்- கொத்தங்குடி ஊராட்சித் தலைவருக்கு- ஏ.வேணு, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பி னர் பதவிக்கு, வார்டு 2- எம்.ஞான சேகரன், வார்டு 3- எம்.வனிதா ஆகி யோர் வேட்பு மனு தாக்கல் செய்திட, மாவட்டச் செயலாளர் நாகைமாலி, வி.தொ.ச. மாநிலப் பொதுச் செயலா ளர் வி.அமிர்தலிங்கம் உள்ளிட்டோர் பேரணியாகச் சென்றனர். நாகை ஒன்றியம்- ஊராட்சிய ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி க்கு- வார்டு 1- பி.டி.பகு, வார்டு 3- எஸ்.திலகவதி, வார்டு 9- வி.மைதிலி, வார்டு 10-இ.பூங்கொடி, வார்டு 11- என்.ஞானசேகர். ஊராட்சித் தலைவர் பதவிக்கு- அகரஒரத்தூர்- பி.மகாலிங்கம், பாப்பாகோயில்- கோ.முருகையன், பெருங்கடம்பனூர்- எம்.தீபாமாரி முத்து, புதுச்சேரி- கோமதி ஜீவாரா மன், ஆலங்குடி- என்.வடிவேல், செம்பியன்மகாதேவி- கோமதி நடரா ஜன், ஆவராணி- கலைமதி செந்தில் குமார், சிக்கல்- விமலாராஜா, பொர வச்சேரி- வடிவழகிகுமார். கீழையூர் ஒன்றியம்- ஊராட்சி ஒன்றிய வார்டு பதவிக்கு- வார்டு 1- த.லதா, வார்டு 5-கே.சித்தார்த்தன், வார்டு 8- டி.வெங்கட்ராமன், வார்டு 10- பி.சேகர். ஊராட்சித் தலைவர் பதவிக்கு- பாலக்குறிச்சி- கே.கிருஷ்ணன், சோழவித்தியாபுரம்- கோமதி தமிழ்ச் செல்வன், தலையாமழை- பி.எம்.உத்திராபதி, மேலவாழக்கரை- ஜெ.அய்யப்பன், வெண்மணச் சேரி- கே.உமாராணி, தன்னி லப்பாடி- ஏ.அறிவழகன், காரப்பி டாகைதெற்கு- வி.பன்னீர்செல்வம், கீழையூர்- ஆர்.ராஜலட்சுமி, கருங்கண்ணி-பி.பக்கிரியம்மாள், இறையாங்குடி- எஸ்.ஜீவானந்தம், திருப்பூண்டி- என்.வேதவல்லி, வேப் பஞ்சேரி- கே.பாப்பாத்தி, திரு வாய்மூர்- என்.வடிவேல், மீனம்ப நல்லூர்- ஆர்.ராதா, வாழக்கரை- ஏ. முருகையன். திருமருகல் ஒன்றியம்- ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பி னர் பதவிக்கு- வார்டு 13- சகாயம் ஜீவதாஸ், வார்டு 13- எஸ்.பிரபாகரன். ஊராட்சித் தலைவர் பதவிக்கு- வாழ்மங்கலம்- செல்விபழனிவேல் போட்டியிடுகின்றனர்.
கரூர்
கரூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களுக்கு கட்சி யின் சார்பில் குளித்தலை ஒன்றி யத்திற்குட்பட்ட இனுங்கூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 4 வது வார்டு, வைரபுரி வார்டு உறுப்பினர் பதவிக்கு கட்சியின் கிளை செயலாளர் ராஜ கோபால் வேட்புமனுவை தாக்கல் செய்தார். ராஜேந்திரம் ஊராட்சி மன்றத்தி ற்கு உட்பட்ட கருங்களாப்பள்ளி, 12வது வார்டு, வார்டு உறுப்பினர் பதவிக்கு மாதர் சங்க குளித்தலை ஒன்றிய தலைவர் கோமதி வேட்பு மனு தாக்கல் செய்தார். கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் இரா.முத்துச்செல்வன், கட்சி கிளை பாண்டியன், சுப்பிரமணி, ராஜேந்தி ரன் கலந்து கொண்டனர்.