நாகப்பட்டினம், ஜூலை 8- நாகப்பட்டினம் ஒன்றியம், சிக்கல் ஊராட்சியைச் சேர்ந்த கோட்டேரி கிராமத்தில், கோலானம் பகுதியில் பக்கிரிசாமி-சுமதி தம்பதியரின் காலனி வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு, வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. தகவல் அறிந்து சிபிஎம் மாவட்டச் செயலாளர் நாகைமாலி, மாநிலக்குழு உறுப்பி னர் வி.மாரிமுத்து, சிக்கல் ஊராட்சி மன்றத் தலைவர் விமலாராஜா, வி.வி.ராஜா உள்ளிட்டோர் தீ விபத்து நடந்த இடத்திற்குச் சென்று, வீட்டின் உரிமையாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரி வித்தனர். அரசின் உரிய நிவாரண உதவிகளைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தனர்.