தரங்கம்பாடி, ஏப்.22-நாகை மாவட்டம் குத்தாலம் அருகே மேக்கரிமங்கலம் ரைஸ்மில் தெருவை சேர்ந்த நெடுஞ்செழியன் மகன் ஜேம்ஸ்(எ) ராஜேஷ்(20). இவன், 13 வயது மனநலம் பாதித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். உடல் நலம் பாதிக்கப்பட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அந்த சிறுமி சிகிச்சைப் பெற்று வருகிறார். காவல்துறையில் புகார் அளித்து 1 வாரம் கடந்த நிலையில் எந்தவித நடவடிக்கையும் இல்லாத நிலையில் மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் டி.கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் அதிகாரி களை சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதையடுத்து இரு தினங்க ளுக்கு முன்னர் ஜேம்ஸ்(எ) ராஜேஷ் என்பவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தை வெளியே கொண்டு வந்த செந்தில் என்பவரை பாலியல் வன்கொடுமை செய்த ராஜேஷ் என்பவனின் நண்பர்களான பிரதீப், பார்த்தீ பன் ஆகியோர் கடுமையாக தாக்கினர். பலத்த காயங்களுடன் செந்தில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்து மாற்றுதிறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் டி.கணேசன் கூறும்போது, மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை வன்கொடுமை செய்த நபரை காவல்துறை அலட்சியம் காட்டி தாமதமாக கைது செய்துள்ளது. இந்த கொடுமையான சம்பவத்தை வெளியே கொண்டு வந்த செந்தில் என்பவரை பாலியல் வன்கொடுமை செய்தவனின் நண்பர்கள் தாக்கிய சம்பவம் கண்டனத்திற்குரியது.உடனடியாக பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய சிகிச்சையும், நிவாரணத்தையும் அளிப்பதோடு முறையான விசாரணை செய்து வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.