கோவில்பட்டி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கொரோனா பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், மற்றும் முழு ஊரடங்கால் பொருளாதார பிரச்சனையில் பின்தங்கி கஷ்டப்படும் குடும்பங்களுக்கும் தோழர் சீனிவாசன் தலைமையில் மார்க்சிஸ்ட்கட்சியினர் உதவிகள் செயது வருகின்றனர். இந்த உதவிகளை முகநூல் வழியாக அறிந்துகொண்ட கயத்தாறு ஒன்றியம் கழுகுமலை அருகில் உள்ள வெங்கடேஷ்வரபுரம் கிராமத்தை சேர்ந்த சரமாரியப்பன், விஜிதம்பதியினரின் மகள் சோபி பாரதி(10) தானும் அவர்கள் செய்யும் உதவியில் பங்கு பெற வேண்டும் என்ற விருப்பத்தை தன் பெற்றோரிடம்கூறினார்.
அவரின் பெற்றோர்கள் சிபிஎம் கயத்தாறு ஒன்றிய செயலாளர் சாலமனை தொடர்புகொண்டு. தங்கள் மகள் சைக்கிள் வாங்குவதற்கு கடந்த 2 வருடமாக உண்டியலில் சேர்த்து வரும் பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறினர். இந்த விபரத்தை தெரிவித்த சாலமன், கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் அவர்களை அழைத்துவந்து குழந்தை சோபிபாரதி மற்றும் அவரின் பெற்றோர்களை சந்தித்தனர்.குழந்தை சோபிபாரதி தான் சைக்கிள் வாங்க உண்டியலில் சேர்த்து வைத்த ரூ.3,610-தை தோழர் சீனிவாசனிடம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்க பயன்படுத்துங்கள் என கூறிகொடுத்தார். உடன் சிஐடியு கருப்பசாமி மற்றும் எல்ஐசி ஊழியர் சங்கம் வில்லிசேரி. லெனின் உடனிருந்தனர்.