சீர்காழி, மார்ச்18- கொள்ளிடம் அருகே செங்கல் சூளை தொழிலாளியான கணவரை காணவில்லை என்று மனைவி போலிசில் புகார் செய்துள்ளார். நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கீரங்குடி கிராமம் அண்ணா நகரைச் சேர்ந்த மாரிமுத்து மகன் தட்சிணாமூர்த்தி(55) செங்கல் தொழிலாளி. இவர் கடந்த 14 ஆம் தேதி அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்து அப்பகுதியில் உள்ள டீ கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வந்தார். ஆனால் இதுவரை வீடு திரும்பவில்லை. அனைத்து உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் தேடியும் தட்சிணாமூர்த்தியை காணவில்லை. இது குறித்து தட்சிணாமூர்த்தியின் மனைவி கௌசல்யா(50) புதனன்று கொள்ளிடம் போலிசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ் பெக்டர் மணிகண்டகணேஷ் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றார். காணாமல் போன தொழிலாளி தட்சிணாமூர்த்தி பணம் கொடுக்கல் வாங்கல் சம்மந்தமாக செங்கல் சூளை உரிமையாளர்கள் யாராவது திடீரென கடத்தி சென்று விட்டார்களா என்ற கோணத்திலும் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.