tamilnadu

திமுகவில் இணைந்த 2 ஆயிரம் பேர் நாகையில் பாஜகவின் கூடாரம் ஒட்டு மொத்தமாக காலியானது

தரங்கம்பாடி, ஜூலை 27- நாகை மாவட்டத்தில் பாஜகவின் கூடாரம் ஒட்டு  மொத்தமாக காலியானது. ஒரு சில நபர்களை  தவி ர்த்து மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் என அனை வரும் திமுகவில் இணைந்து விட்டனர். ஓரிரு தினங்க ளுக்கு முன்பு பாஜகவின் மாநில செயலாளராக பதவி  வகித்த முன்னாள் எம்.எல்.ஏ  வேதாரண்யம் வேதரத்தி னம் என்பவர் அக்கட்சியிலிருந்து விலகி தனது ஆத ரவாளர்கள் 2ஆயிரம் பேருடன் திமுகவில் இணைந்த நிலையில் அக்கட்சியின் மாவட்ட பொதுச் செயலாள ராக இருந்த அமுர்த விஜயகுமார் தனது ஆதரவா ளர்கள் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்களுடன் (2  ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன்) பாரதிய ஜனதா கட்சி யிலிருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இவர் பாஜகவின் நாகை மாவட்ட செயலாளராக  கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர். திரு க்கடையூரை சேர்ந்த அமுர்த விஜயகுமார்.

பாஜக வின் மக்கள் விரோத நடவடிக்கைகளினால் அதிருப்தி யடைந்த அவர் அக்கட்சி பொறுப்பிலிருந்தும், கட்சியி லிருந்தும் விலகி வெள்ளியன்று  மாலை திருக்கடை யூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் தலைமை யில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் காணொளி காட்சி மூலம்  திமுகவில் இணைந்தார்.  அவருடன் திருக்கடையூர், பூம்புகார், வானகிரி,  செம்பனார்கோவில், திருவெண்காடு உள்ளிட்ட பகுதி களில் உள்ள 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.  அமுத விஜயகுமார் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல்  2011ம் ஆண்டு வரை திருக்கடையூரில் ஊராட்சி மன்ற  தலைவராக இருந்துள்ளார். 2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை பாஜக-வின் மாவட்ட செயலாள ராக பொறுப்பு வகித்திருக்கிறார். அக்கட்சியின் பூம்பு கார் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும் இவர் இரு ந்துள்ளார்.  ஏற்கனவே திமுகவில் இருந்த இவர் மீண்டும்  திமுகவில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தி ருப்பது குறிப்பிடத்தக்கது.