tamilnadu

கோவில் விழாவில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட 100 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்

தரங்கம்பாடி, ஏப்.22-நாகை மாவட்டம் பூம்புகார் அருகே வானகிரி கிராமத்தில் உள்ள கோவில் விழா திங்களன்று நடைபெற்றது. இதனை சுற்றியுள்ள கீழப்பெரும்பள்ளம், மேலப்பெரும்பள்ளம் உள்ளிட்ட ஏராளாமான கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட விழாவில் திருவெண்காடு பகுதியில் உள்ள சுவாதிகா ஐஸ் என்ற பெயரில் செயல்படும் ஐஸ் கம்பெனி மூலம் விற்பனை செய்யப்பட்ட ஐஸ் மற்றும் ஐஸ் க்ரீம்களை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மயிலாடுதுறை, சீர்காழி, திருவெண்காடு அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளை சேர்த்தனர். அனுமதியின்றி இயங்கி வந்த இந்த ஐஸ் நிறுவனத்தில் காலாவதியான ஐஸ்களை விற்பனை செய்து வருவதாகவும், இதை அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்ததாலேயே தற்போது இது போன்ற சம்பவம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.