மும்பை:
மும்பை பங்குச் சந்தை, தொடர்ந்து 2-ஆவது நாளாக சரிவைச் சந்தித்துள்ளது.மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ், கடந்த வெள்ளிக்கிழமையன்று 41 ஆயிரத்து 169 புள்ளிகளில் நிலைபெற்றிருந்தது. இது, அமெரிக்க ஜனாதி பதி டிரம்ப் இந்தியா வந்திறங்கிய நிலையில், திங்களன்று வர்த்தக வாரத்தின் முதல்நாளே அடி வாங்கியது. 40 ஆயிரத்து 363 புள்ளிகளுக்கு சென்செக்ஸ் சரிந்தது. அதாவது, 806 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.தேசியப் பங்குச் சந்தைக் குறியீடான ‘நிப்டி’ கடந்தவார வர்த்தகத்தின் இறுதிநாளில் 12 ஆயிரத்து 80 புள்ளிகளில் நிறைவடைந்து இருந்த நிலையில் அதுவும், திங்களன்று 11 ஆயிரத்து 838 புள்ளிகளுக்கு சரிந்தது. சுமார் 242 புள்ளிகளை இழந்தது.
இந்நிலையில், செவ்வாயன்று இரண்டாவது நாளாக மும்பை பங்குச் சந்தை, 82 புள்ளிகளை இழந்து, 40 ஆயிரத்து 281 புள்ளிகளுக்கு சரிந்தது. நிப்டி 31.50 புள்ளிகள் வீழ்ச்சியைச் சந்தித்து, 11 ஆயிரத்து 797 புள்ளிகளுக்கு இறங்கியுள்ளது.