tamilnadu

img

பங்குச்சந்தைகள் 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஏன்? ரூ.3.6 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்!

புதுதில்லி:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த நாளில்மட்டும், பங்குச் சந்தை முதலீட்டாளர் கள் சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் கோடியை இழந்துள்ளனர்.2020-2021-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபிப்ரவரி 1 அன்று, மும்பை பங்குச்சந்தை பெரும் சரிவைச் சந்தித்ததே இதற்குக் காரணமாகியுள்ளது. பிப்ரவரி 2 அன்று, மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு ஒரே நாளில் 987.96 புள்ளிகள் குறைந்து 39,735.53 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தையான ‘நிப்டி’யும் ஒரேநாளில் 300 புள்ளிகள் வரை குறைந்து 11 ஆயிரத்து 661 புள்ளிகளுடன் முடிந்தது. ஒட்டுமொத்தமாக மும்பை பங்குச் சந்தை -2.43 சதவீதமும் தேசிய பங்குச் சந்தை-2.51 சதவிகிதமும் சரிவை கண்டன. 

இந்நிலையில், மேற்கண்ட சரிவு, கடந்த, 11 ஆண்டுகளில் ஏற்படாத ஒன்றுஎன்று கூறப்படுகிறது. ஏனெனில், கடந்த2008-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம்தேதி, பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்த காலத்தில், ஒரே நாளில்1,070.63 புள்ளிகள் அளவிற்கு பங்குச்சந்தை சரிவைச் சந்தித்தது. அதற்குப் பின், தற்போதுதான் மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் குறியீடு ஒரேநாளில் சுமார் 987.96 புள்ளிகள் அளவிற்கு சரிவைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாக, மும்பை பங்குச்சந்தையில் பிப்ரவரி 2 அன்று ஒரேநாளில் மட்டும் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், ரூ. 1.53 லட்சம் கோடியிலிருந்து ரூ.3.6 லட்சம் கோடியை இழந் துள்ளனர்.