மும்பை, தானே மற்றும் பால்கர் மாவட்டங்களில் மிக அதிக மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
மும்பையில் உள்ள தானே மற்றும் பால்கர் மாவட்டங்களில் செவ்வாய் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல பகுதிகளில் இடுப்பு அளவுக்கும் ஆழமான நீர்மட்டம் உருவாகியுள்ளது. ரயில் மற்றும் போக்குவரத்து சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என பேரழிவு மேலாண்மைத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. மழை நீரால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க தேசிய பேரிடர் மேலாண்மைத்துறை படையின் வீரர்கள் (என்.டி.ஆர்.எஃப்) 5 குழுக்களாக பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் அதிக மழை பெய்துள்ள நிலையில், புதனன்று நகரத்திலும், புறநகர்ப்பகுதிகளிலும் அதிக மலை பெய்யக்கூடும் என இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மக்களுக்கு உதவ மீட்புக்குழுக்களை தயார் நிலையில் வைத்துள்ளதாக மத்திய அமைச்சர் விஜய் வதேட்டிவார் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.