கொரோனாவால் குழந்தை பிறப்பு அடிப்படையிலான உத்தேச ஆயுட் காலம் 2 ஆண்டுகள் குறைந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா – மும்பையில் ஐ.ஐ.பி.எஸ்., எனப்படும் மக்கள்தொகை ஆய்வுகளுக்கான சர்வதேச மையத்தின் பேராசிரியிர் சூர்யகாந்த், இந்தியர்களின் ஆயுட்காலம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில் குழந்தை பிறப்பு மற்றும் மக்களின் இறப்பு விகிதம் நிலையாக இருந்தால் பிறந்த குழந்தையின் சராசரி வாழ்நாள் அடிப்படையில் அதன் ஆயுட்காலம் கணிக்கப்படுகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் வழக்கத்தை விட 35-79 வயதிற்குட்பட்டோர் அதிக அளவில் இறந்துள்ளார்.
இதனால் பிறப்பு, இறப்பு விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2019 நிலவரப்படி ஆண்களின் உத்தேச ஆயுட்காலம் 72 ஆண்டுகள் என்ற நிலையிலிருந்து 69.5 ஆண்டுகளாக குறைந்துள்ளது. பெண்களுக்கு 69.8 ஆண்டுகளிலிருந்து 67.5 ஆண்டுகளாக சரிவு அடைந்துள்ளது என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஐ.ஐ.பி.எஸ்., இயக்குனர் கே.எஸ்.ஜேம்ஸ் கூறும்போது, ஆப்ரிக்காவில் எய்ட்ஸ் பரவிய பின், மக்களின் உத்தேச ஆயுட்காலம் குறைந்தது. எய்ட்ஸ் கட்டுப்படுத்தப்பட்ட பின், மீண்டும் உத்தேச ஆயுட்காலம் அதிகரித்துள்ளது என்றார்.