tamilnadu

img

கொரோனாவை விட மோடியின் பேச்சு ஆபத்து...

மும்பை:
சீனாவுடனான சண்டையில், பீகார் படைப்பிரிவுதான்தைரியம் காட்டியது என்று பேசுவதன் மூலம், பிரதமர் மோடி ராணுவத்திற்கு உள்ளும் சாதி மற்றும் பிரதேச அரசியலை தூண்டுவதாக சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது.

பீகாரில் தேர்தல் வருவதால், திட்டமிட்டே அவர் பீகார் வீரர்களை மட்டும் பாராட்டிஇருப்பதாகவும் தனது  பத்திரிகையான ‘சாம்னா’வில் சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது.“கல்வான் பள்ளத்தாக்கு சண்டையில் பீகார் படைப்பிரிவின் தைரியத்தை மோடி பாராட்டுகிறார். அப்படியானால், ‘நாடு அதன் எல்லைகளில் நெருக்கடிகளை சந்தித்துவரும்போது மஹர், மராத்தா, ராஜ்புத், சீக்கியர்கள், கூர்க்கா, டோக்ராபடைப்பிரிவுகள் என்ன சும்மாஉட்கார்ந்து கொண்டு புகையிலை மென்று கொண்டிருந்தார்களா?’
 என்ற கேள்வி எழுகிறது.

பீகாரில் தேர்தல் வருவதால் இந்திய ராணுவத்தையே சாதி, பிராந்திய வாரியாகபிரதமர் மோடி பேதம் பிரிக்கிறார். இத்தகைய மோசமான தேர்தல் அரசியலை ஏற்கமுடியாது. இந்த அரசியல் ஒரு நோய், கொரோனா வைரஸை விடவும் படுமோசமானது” என்று சாம்னா விமர்சித்துள்ளது.