tamilnadu

img

சோட்டா ராஜன் சகோதரருக்கு எம்எல்ஏ சீட்

மும்பை:
மும்பை நிழலுலக தாதா சோட்டாராஜனின் சகோதரர் நிக்கல்ஜே, பாஜக கூட்டணி சார்பில் எம்எல்ஏ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மும்பை குண்டுவெடிப்பு வழக்கில், முக்கியக் குற்றவாளியாக இப்போதுவரை தேடப்பட்டு வருபவர் தாவூத் இப்ராகிம். மும்பையின் நிழலுலக தாதா-வாக வலம்வந்தவர். இவரின் கூட்டாளிதான் சோட்டாராஜன். தாவூத் இப்ராகிமோடு சேர்த்து இவரும் சிபிஐ-ல்தேடப்பட்டு வந்தார். 27 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2015-ஆம் ஆண்டு, இந்தோனேசியாவின் பாலி நகரில் கைது செய்யப்பட்டு, தற்போது மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், 70-க்கும் மேற்பட்ட கொலை வழக்கு மற்றும்கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய சோட்டா ராஜனின் சகோதரருக்கு, மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜககூட்டணியில் சீட் வழங்கப்பட்டுள் ளது. பால்தான் சட்டப்பேரவைத் தொகுதியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் சோட்டா ராஜனின் சகோதரர் தீபக் நிகல்ஜே களமிறக்கப்பட்டுள்ளார். நிக்கல்ஜே மீதும், கடந்த 2018-ஆம் ஆண்டு 22 வயது பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டு உள்ளது. செம்பூர் சித்தார்த் காலனியைச் சேர்ந்த- பாதிக்கப்பட்ட பெண், இரண்டு நாட்களுக்கு முன்புகூட நிக்கல்ஜேவை கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.