மும்பை
நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த பொழுதிலும் கொரோனா வைரஸ் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவின் நிதிநிலை நகரை கொண்டுள்ள மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் அதிக சேதாரத்தை ஏற்படுத்தி வருகிறது. அங்கு தற்போதைய நிலவரப்படி 781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 45 பேர் பலியாகியுள்ளனர். ஆசியாவின் மிகபெரிய குடிசை பகுதியான தாராவியையும் கொரோனா விட்டுவைக்கைவில்லை.
இந்நிலையில், நாட்டின் பிரபல மருத்துவமனைகளில் ஒன்றான ஒக்கார்ட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட அந்த மருத்துவமனையை மூடுவதாக மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. ஒக்கார்ட் மருத்துவமனையில் 26 செவிலியர்கள், 3 மருத்துவர்கள் என மொத்தம் 29 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் ஒக்கார்ட் மருத்துவமனைக்குள் செல்லவோ, மருத்துவமனையில் இருக்கும் நபர்கள் வெளியே வரவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.